உத்திரபிரதேசத்தில் மனநல பிரச்சனை தீர்ந்துவிடும் எனக்கூறிய சாமியாரை நம்பி தனது உறவினரின் 10 வயது மகனை நரபலி கொடுத்த அனூப் என்பவர் கைது.அனூப், சாமியார் உட்பட 3 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை.
பர்சா கிராமத்தில் வசிக்கும் கிருஷ்ண வர்மாவின் மகன் விவேக் வர்மா வியாழக்கிழமை இரவு காணாமல் போனதாகவும் அதே இரவில் வயலில் குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாவும் மேலும் குழந்தையின் கழுத்தை யாரோ அறுத்ததாகத் தெரிகிறது. என காவல்துறை கண்காணிப்பாளர் பிரசாந்த் வர்மா தெரிவித்துள்ளார்.
விசாரணையில், இறந்த குழந்தையின் உறவினர் அனூப் என்பவருக்கு இரண்டரை வயதில் அறிவு வளர்ச்சி குன்றிய குழந்தை ஒன்று இருப்பது தெரியவந்தது. பல மருத்துவர்கள் அளித்த சிகிச்சையிலும் சரி அகாததால் அருகில் இருந்த சாமியாரிடம் அழைத்து சென்றுள்ளார்.
அந்த சாமியார் நரபலி கொடுக்குமாறு வற்புறுத்தியதால், அனூப் மற்றும் சிந்தாரம் 10 வயது சிறுவனை மண்வெட்டியால் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்